தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - தூத்துக்குடி மாவட்டம் வட்டார வள வல்லுநர் தேர்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 3 August 2024

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - தூத்துக்குடி மாவட்டம் வட்டார வள வல்லுநர் தேர்வு.


 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - தூத்துக்குடி மாவட்டம் வட்டார வள வல்லுநர் தேர்வு.


தூத்துக்குடி மாவட்டம், ஆகஸ்ட்.03,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூடுகை மற்றும் கூட்டாண்மை பிரிவின் கீழ் வட்டார வள வல்லுநர் (BRP) மூலம் வட்டார அளவிலான கூட்டமைப்புகள்(BLF)இ ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்(PLF)இ சமுதாய வள பயிற்றுநர்கள்(CRPs) மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு(SHG) பயிற்சி அளித்திட வட்டார வள வல்லுநர் (BRP) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


விண்ணப்பதாரர் கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடமானது முற்றிலும் தற்காலிகமானதாகும். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 01.03.2024 அன்று 25-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
வட்டார அளவிலான கூட்டமைப்பு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் 2-3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும்.


தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
தகவல்களை தெரிவிக்கும் திறன் மற்றும் மக்களிடம் செயல்திறன் வெளிப்படுத்தும் தனித்திறமை பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.(Excel, Word & etc., )


மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு, விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள்; 09.08.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி-க்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பணி நியமனம் கோரும் விண்ணப்பத்தினை சுய விபரம் அடங்கிய ஆவண நகல்களுடன் சமர்ப்பித்திட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad