நாசரேத் சாலமோன் பள்ளியில் பசுமை தினம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 7 August 2024

நாசரேத் சாலமோன் பள்ளியில் பசுமை தினம்.


நாசரேத் சாலமோன் பள்ளியில் பசுமை தினம்.


நாசரேத், ஆகஸ்ட்.05,
நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தினம் 03.08.24 அன்று நடைபெற்றது.
இந்த விழாவை பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தொடங்கி வைத்தார்.


பள்ளித் தலைவர் எலிசபெத்பால் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் பசுமை தின சிறப்புகளை எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சி பசுமையால் விளையும் நன்மைகளைப்பற்றி மாணவர்களக்கு கூறினார்.


பள்ளி மாணவர்கள் பச்சை நிற திண்பண்டங்கள் மற்றும் பச்சை காய்கறிகளால் செய்த உணவு வகைகள் போன்றவற்றை கொண்டுவந்து உண்டு மகிழ்ந்தனர். மாணவர்கள்  பச்சை காய்கறிகள் மற்றும் பச்சை பழங்களைப்பற்றி மேடையில் பேசினார்கள்.


மாணவர்கள் பச்சைநிற உடை அணிந்து அழகிய நடனம் ஆடினார்கள். பள்ளி உதவி முதல்வர் மாரிதங்கம் நன்றியுரை கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad