இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின்.......விஞ்ஞானி ஜெயசோமு பணி நிறைவு பாராட்டு விழா..... குடும்பத்தினர் ,உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 12 August 2024

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின்.......விஞ்ஞானி ஜெயசோமு பணி நிறைவு பாராட்டு விழா..... குடும்பத்தினர் ,உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

 


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப துறையின்.......விஞ்ஞானி ஜெயசோமு பணி நிறைவு பாராட்டு விழா.....  குடும்பத்தினர் ,உறவினர்கள், பொதுமக்கள் பங்கேற்பு



 தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி என் எஸ்கே தெருவை  சேர்ந்த ஜெயசோமு புதுடெல்லியில் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் CSIR-NIScPR  நிறுவனத்தில் 1989ம் ஆண்டு விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து 35 ஆண்டுகள் பணியாற்றி 2024ம் ஆண்டு அதே நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மற்றும் இயக்குநராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவரது பணி நிறைவு விழா  தெற்கு பரமன்குறிச்சி NSK தெருவில்  இன்று நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். விஞ்ஞானி ஜெய சோமுவின் பணியை பாராட்டி பலரும் பேசினர்.  அவரின் பள்ளி  மற்றும் கல்லூரி கால நண்பர்கள் கலந்து கொண்டு அவருடனான நட்பு குறித்து பேசி  நினைவு பரிசுகள் வழங்கினர். பணி நிறைவு பெற்ற விஞ்ஞானி ஜெய சோமுவுடன் புகைப்படம், செல்பி எடுத்துக்கொண்டனர். முடிவில் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு விருந்து வழங்கப்பட்டது . விழாவில் நிறைவுறையாற்றிய விஞ்ஞானி ஜெய சோமு  தனது ஆரம்பகால பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் பணியில் படிப்படியாக உயர்ந்து உயர் பதவிக்கு வந்த அனுபவங்களை நிகழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சி யை  டாக்டர் சௌமியா சுந்தரவதனம் தொகுத்து வழங்கினார். விழாவில் என்எஸ்கே  ஊர் தலைவர்  ராகவன்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஞ்ஞானி ஜெயசோமு மற்றும் அவரது குடும்பத்தினர் செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad