வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும், சொந்த நூலகத்திற்கான விருது” வழங்கப்படும். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 11 August 2024

வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும், சொந்த நூலகத்திற்கான விருது” வழங்கப்படும்.


 வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும், சொந்த நூலகத்திற்கான விருது” வழங்கப்படும்.


தூத்துக்குடி, ஆகஸ்ட்.11, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2024ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.


தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து ‘சொந்த நூலகங்களுக்கு விருது" வழங்கப்படும் என்ற அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளார்கள்.


மேற்கண்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் சொந்த நூலகங்களின் விவரங்கள், நூல்களின் எண்ணிக்கை, எந்த வகையான நூல்கள், அரியவகை நூல்கள், நூல்கள் எந்த நாள் முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், நூலகத்தின் புகைப்படங்கள் போன்ற விவரங்களை தூத்துக்குடி மாவட்ட மைய நூலகரின் வாட்சப் (94880 71114, 99523 84714) எண்களிலோ, tkdopac@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மாவட்ட மைய நூலகர், மாவட்ட மைய நூலகம், டூவி புரம் 9ஆவது தெரு, தூத்துக்குடி மாவட்டம் - 628003 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.


எனவே, மாவட்ட அளவில் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு நூலகத்தினை தெரிவு செய்து ‘சொந்த நூலகத்திற்கான விருது" தூத்துக்குடியில் வருகின்ற செப்டம்பர்-2024 மாதம் நடைபெறும் 5ஆவது புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும்.


ஆகையால், சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கும் அரசின் உயரிய நோக்கம் அனைத்துத்தரப்பு மக்களையும் சென்றடைவதோடு, வீடுதோறும் நூலகங்கள் அமைத்து மென்மேலும் வாசிப்பு பழக்கத்தை விரிவுபடுத்திட மாணவர்கள், இளைஞர்கள், நூல் ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad