ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி சுமார் 4,65,000/- பணம் மோசடி. - 2 பேர் கைது - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 16 August 2024

ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி சுமார் 4,65,000/- பணம் மோசடி. - 2 பேர் கைது


தூத்துக்குடியில் ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி சுமார் 4,65,000/- பணம் மோசடி செய்த பெண் உட்பட 2 எதிரிகளை கைது அவர்களிடமிருந்து ஒரு கார், பணம் ரூபாய் 30,000/- , சுமார் 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் - எதிரிகளை கைது செய்த சைபர் குற்றப் பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மர்ம நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு ஆவின் பாலகம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதற்கு பதிவு கட்டணம், செயலாக்க கட்டணம், ஆவணக் கட்டணம் (Registration Fees, processing fees, Documentation charges Etc.,) என பல்வேறு காரணங்களை கூறி மேற்படி பாதிக்கப்பட்ட நபரிடம் அந்த மர்மநபர்கள் மொத்தம் ரூபாய் 4,65,000/- பணத்தை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து மேற்படி நபர் National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

மேற்படி பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ்குமார் (44) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த கிறிஸ்டிமா (29) என்ற பெண் ஆகியோர் மேற்படி நபரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரிகளில் சுரேஷ்குமாரை திருச்சியில் வைத்து கைது செய்தும், கிறிஸ்டிமாவை தூத்துக்குடியில் வைத்து கைது செய்தும் அவர்களிடமிருந்து ஒரு கார், பணம் ரூபாய் 30,000/- , சுமார் 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மேற்படி எதிரிகளை நேற்று (15.08.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி எதிரி சுரேஷ்குமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், எதிரி கிறிஸ்டிமாவை தூத்துக்குடி கொக்கரக்குளம் சிறையிலும் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி வழக்கில் எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து சொத்துக்களை கைப்பற்றிய சைபர் குற்றப் பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் 
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad