தமிழ்ப் புதழ்வன் திட்டம் - மூலம் மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 2 August 2024

தமிழ்ப் புதழ்வன் திட்டம் - மூலம் மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை

 


தமிழ்ப் புதழ்வன் திட்டம் - மூலம் மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித்தொகை.


தூத்துக்குடி, ஆகஸ்ட்.02, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்கும் "தமிழ்ப்புதழ்வன் திட்டம்" வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி செயல்படுத்தப்படவுள்ளது.


இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய அனைத்து மாணவர்களும் கல்லூரி தொடர்பு அலுவலர்கள் மூலம் விண்ணப்பித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக புதிய வங்கி கணக்கு தொடங்கிடவும், ஆதார் எண் இணைப்பதற்காகவும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இன்று 2.8.24 தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு அவர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.


இந்நிகழ்வில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முத்துராசு மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad