புதுக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல்.
புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஞானராஜன் மற்றும் போலீசார் நேற்று (29.07.2024) புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் புதுக்கோட்டை குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் மாரிராமர் (36) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் மாரிராமரை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள 187 கிலோ புகையிலை பொருட்கள், ரொக்க பணம் ரூபாய் 25,500/- மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் & தாலுகா
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment