திருச்செந்தூரில் உள்ள..... ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி பீடத்தில் மாதாந்திர பரணி விழா 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரை ஓரத்தில் ஸ்ரீ சத்ரு சம் ஹார மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி பீடம் உள்ளது. இங்கு மாதாந்தோறும் பிறகுபரணி விழா, அன்னதானம் நடைபெறுகிறது. அதன்படி ஆடி மாத பரணி விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஸ்ரீ சத்ரு சம் ஹார மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோம பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 2000 க்கு மேற்பட்ட பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மூன்று வேளையும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சத்ரு சம் ஹார மூர்த்தி சுவாமி நிர்வாக சங்கத்தினர் தனசேகரன் தலைமையில் சிறப்பாக செய்திருத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment