வணிகர் சங்க பேரவையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கம் நேரில் சந்திப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 July 2024

வணிகர் சங்க பேரவையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கம் நேரில் சந்திப்பு.


வணிகர் சங்க பேரவையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கம் நேரில் சந்திப்பு.


இன்று, ஜூலை.05, சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் சுதேசி நாயகன் த.வெள்ளையன் அவர்களை, தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார், மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து  உரையாடினார்.


அவருடன் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ், மாநில இணைச் செயலாளர் குருசாமி மற்றும் மாநில துணைத்தலைவர் ‌ஆதம்பாக்கம் செல்வகுமார் இருந்தனர்.


அப்போது வணிகர் நலனுக்காக புதியதாக தொடங்கி இருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவித்து ஆலோசனைகளை வழங்கினார். வணிகர்களுக்கு உள்நாட்டு உற்பத்தி பொருட்களையே வாங்கி விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்தினார்.


அதுமட்டுமின்றி வணிகர் சங்கங்கள் தனித்தனியாக இருப்பினும் வணிகர்களுடைய வாழ்வாதார பிரச்சினை வரும் போது அனைத்து வணிகர் சங்கமும் ஒன்றிணைந்து போராட முன் வரவேண்டும் என வலியுறுத்தி வாழ்த்தினார். முதுபெரும் தலைவரின் ஆசிர்வாதம் வாழ்த்துகளுடன் புதிய உத்வேகத்துடன் தமிழ்நாடு வணிகர் சங்கம்.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad