திருச்செந்தூர் சோனகன்விளையில் உள்ள அருள் நெறி இந்து பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 July 2024

திருச்செந்தூர் சோனகன்விளையில் உள்ள அருள் நெறி இந்து பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்

 


திருச்செந்தூர் சோனகன்விளையில் உள்ள அருள் நெறி இந்து  பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கல்



தூத்துக்குடி மாவட்டம் கா. தி. சோனகன்விளை அருள் நெறி இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது  பிறந்தநாள் விழா விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பள்ளியின் பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி வரவேற்றார்.


பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசன் முன்னிலை வைத்தார். தொழிலதிபர் கோவை ராமசாமி நாடார், சோனகன்விளை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சதீஷ்குமார், தொடக்கப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் சரவணன் ,ஆடிட்டர் ஜெயக்குமார் ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முன்னாள் கவுன்சிலர் பெருமாள், ஜெய ஆதித்தன் , சமூக ஆர்வலர் தமிழ் குட்டி, ஆறுமுகம் என்ற சுப்பையா, சந்திரசேகரன் ஆச்சாரி ,நந்தகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தினேஷ் திருமுருகன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு நடத்தினார். பரிசு பொருட்களுக்கான  அன்பளிப்புகளை சோனகன்விளை, காணியாளன்புதூர், திருமலையப்பபுரம்  இளைஞரணி முன்னாள் மாணவர்கள் வழங்கி இருந்தனர்


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்..

No comments:

Post a Comment

Post Top Ad