ஆலந்தலை இயேசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில்... 350 வது யூபிலி விழா சிறப்பு திருப்பலி......முன்னாள் ஆயர் இவோன் அம்பு ரோஸ் நற்செய்தி... - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 July 2024

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில்... 350 வது யூபிலி விழா சிறப்பு திருப்பலி......முன்னாள் ஆயர் இவோன் அம்பு ரோஸ் நற்செய்தி...

 


ஆலந்தலை இயேசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில்...  350 வது யூபிலி விழா  சிறப்பு திருப்பலி......முன்னாள் ஆயர் இவோன் அம்பு ரோஸ்  நற்செய்தி...



திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இயேசுவின் திரு  இருதய ஆலயத்தில்  மாதத்தின் முதல் வெள்ளியான இன்று திரு இருதய ஆண்டவர் பெருவிழா  350 வது யூபிலி விழா  சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில்   சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் ஆயர் இவோன் அம்பு ரோஸ் வருகை புரிந்தார். அவருக்கு   திருக்குடும்பம் உயர்நிலைப்பள்ளி  மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர்  கைகளில் யூபிலி திருக்கொடியுடன் வரவேற்பளித்தனர். பின்னர் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில்  ஆயர் இவோன் அம்பு ரோஸ் சிறப்பு நற்செய்தி வழங்கினார். அப்போது  கருணை  செயல் வடிவால் மட்டுமே  பார்க்க முடியும்  உண்மையான அன்பை கருணை வழியாக தான் காட்ட முடியும் சிறப்பு நற்செய்தி வழங்கினார். நிகழ்ச்சியில்  அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் உட்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர்  சில்வெஸ்டர் மற்றும் உதவி பங்கு தந்தை ஜோதிமணி,பக்த சபைகள்,ஆலந்தலை இறைமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad