திருச்செந்தூர் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலையை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 July 2024

திருச்செந்தூர் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலையை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.

 


திருச்செந்தூர் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலையை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.



திருச்செந்தூர் அருகே ஆலந்தலை வழியாக இலங்கைக்கு கடத்தவதற்காக லாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்பிலான சுமார் 2 டன் பீடி இலைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.



கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலைய ஆய்வாளர் சைரஸ் தலைமையில், காவலர்கள் மாரியப்பன், கார்த்திகேயன், செல்வகுமார், ராஜேந்திரகுமார், முனியராஜ், கண்ணன் ஆகியோர் இன்று அதிகாலை திருச்செந்தூர் கடல் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட ஆலந்தலை கடற்கரை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த லாரியை சோதனை செய்தபோது அதில் 35 கிலோ எடை கொண்ட 61 வெள்ளை நிற சாக்கு மூடைகளில் சுமார் 2 டன் பீடி இலை  இருந்தது. அக்கம் பக்கத்தில் சுற்றி பார்த்தபோது யாரும் தென்படவில்லை. விசாரணையில் பீடி இலை பண்டல்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக தயாராக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பீடி இலை பண்டல்கள் மற்றும் வண்டியை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு ரூ.  30 லட்சம் மதிப்பு ஆகும்.



தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad