டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சாகுபுரம், டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில் பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார், சுற்றுச்சூழல் தினத்தின் அவசியத்தை பற்றி வலியுறுத்தி பேசினார்.
டி.சி.டபிள்யு மூத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்) சீனிவாசன், மரங்களின் அவசியம், தண்ணீர் சிக்கனம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை பற்றியும் மேலும் ஏனைய செயல்களில் மக்களின் ஆர்வம் பற்றியும், நாம் கையாள வேண்டிய வழிவகைகளை பற்றிய தலைமையுரை ஆற்றினார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய பதாகைகளை வெளியிட்டு அதை அனைத்து துறை தலைவர்களுக்கும் வழங்கினார். சுற்றுச்சூழல் தின விழா கொண்டாட்டாம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவருக்கும், பங்கேற்றவர்களுக்கும் "சூழல் நடப்புமிக்க பரிசுகள்" வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழல் தினத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக ஆலை வளாகத்தில் 150 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மூத்த செயல் உதவித்தலைவர் (பணியகம்), மூத்த அலுவலர்கள் உயர்அதிகாரிகளால், தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளால் நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு, சிவில் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்

No comments:
Post a Comment