நாசரேத் - திறுமறையூரில் சுற்று சூழல் தினம் நினைவூட்டல்.
நாசரேத், ஜூன்.05, தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை மற்றும் திருமறையூர் மறுரூப ஆலயத்தின் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் ஆசரிக்கப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. சபை ஊழியர் ஸ்டான்லி ஜான்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்தார். தென்னிந்திய திருச்சபை சினாட் மாமன்ற சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் இணை இயக்குனரும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனை துறையின் செயலாளர் ஜான் சாமுவேல் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து ஆலய வளாகம் மற்றும் திருமறையூர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த வாரத்திற்குள்ளாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருமறையூர் சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ், சேகரச் செயலாளர் ஜான்சேகர்,சேகர பொருளாளர் அகஸ்டின், ஆலய பாடகர் குழு தலைவர் ஜோயல், கமிட்டி உறுப்பினர்கள் பெஞ்சமின், ஜீவன், ஆசீர் துரைராஜ், மறைக்குமார், டேவிட் லிவிங்ஸ்டன், ஆலய பணியாளர் ஆபிரகாம், எழுத்தர் ஜெபக்குமார், பேராசிரியர் பொன்னுசாமி, ஜோஷ் சுந்தர், அசன கமிட்டி பொருளாளர் ரூபன் காலிசன், அருள்குமார், பாடகர் குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான திருச்சபையார் பங்கு பெற்றார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் செய்திருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம்
ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn. சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:
Post a Comment