திருச்செந்தூர் கோவில் கடலில் தவறிய தங்க செயின் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களால் கண்டெடுப்பு! திருக்கோவில் அதிகாரி Aso ராமச்சந்திரன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைப்பு!
உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கடற்கரையில் இன்று மாலை 4 மணிக்கு கடலில் நீராடிய அருப்புக்கோட்டையை சேர்ந்த பிரியா என்பவர் தனது உறவினர்களுடன் கடலில் நீராடி கொண்டிருக்கும் பொழுது அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயின் கடலில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டது.
இதை கண்ட பிரியா உடனடியாக அருகில் இருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களிடம் தெரிவித்தார்.
உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கடலுக்குள் இறங்கி தேடினார்கள் அப்பொழுது அவரது தங்க செயின் கண்டெடுக்கப்பட்டது.
அதை உடனடியாக கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் உரியவரிடம் காண்பித்தனர். பின்பு திருக்கோவில் அதிகாரி ராமச்சந்திரன் Aso அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது . அவர் உடனடியாக கடற்கரைக்கு வந்து அவரது தங்க செயின் அணிந்திருந்த போட்டோக்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தார். பின்பு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்
No comments:
Post a Comment