ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருட சேவை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 May 2024

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருட சேவை.

 


ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருட சேவை.   



ஸ்ரீவைகுண்டம் மே. 30, நவதிருப்பதி களில் 1 வது திருப்பதி  கோவிலில் வருஷாபிஷேகத்தை  முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத திருவோணம் நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம் 8 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு பூர்ணாகுதி,  10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


மாலை 5 மணிக்கு சாயரட்சை 6.30 மணிக்கு சுவாமி கள்ளபிரான்  வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 8.30 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின்னர்  வீதி உலா நடந்தது.


இந்நிகழ்ச்சியில்  அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், அனந்த பத்மநாபன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன் வாசன் திருவேங்கடத்தான், கண்ணன், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் அருணாதேவி கொம்பையா, மாரியம்மாள் சண்முகசுந்தரம், முருகன் முத்துகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, உபயதாரர் பிரகாஷ்,  ஸ்தலத்தார்கள் ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா. தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad