நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 May 2024

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா

 


நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா


நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. 
நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் 25 வது ஆண்டு விழா நடந்தது. தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி தாளாளர் செல்வின் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயச்சந்திரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். ஒய்வு பெற்ற குருவானவர் ஜெரேமியா, முன்னாள் கல்லூரி தாளாளர் ஜேஸ்மின் ராபர்ட்சன், ஒய்வு பெற்ற ஆசிரியை விஜேந்திரா தியோடர், கோவை தொழிலதிபர் தனுஷ்கரன்  ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் இடம் பெற்றன. நிகழ்ச்சியை கல்லூரி அலுவலர் சுந்தரி தொகுத்து வழங்கினார். 


இதில்  மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல்,  நாசரேத் தூய யோவான் பேராலய சபை ஊழியர்கள் ஜெசு, ஜெபராஜ் சாமுவேல், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை கிறிஸ்டினா ஜாண்சன் நன்றி கூறினார். 

நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad