நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் பேட்டரி கார் வழங்கல்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 7 May 2024

நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் பேட்டரி கார் வழங்கல்!


 நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி  சார்பில் பேட்டரி கார் வழங்கல்!




நாலுமாவடி பன் னோக்கு மிஷன் மருத்துவமனை க்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி  சார்பில் பேட்டரி கார் வழங் கப்பட்டது.
               

நாலுமாவடியில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை மூலம் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு மெர்கன் டைல் வங்கி நாலுமாவடி கிளை சார்பில்  சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனைக்கு மாற்றுத்திற னாளிகள் மற்றும் முதியோர்களை அழைத்து செல்ல உதவியாக ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி கார் வழங்கும் விழா மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் மண்டல துணை மேலாளர் பாலமுருகன் பேட்டரி காரின் சாவியை வழங்கி  னார்.இதில் டிஎம்பி தலைமை மேலாளர் (மார்க்கெட்டிங்) இளங்கோவன், நாலுமாவடி கிளை மேலாளர் மேகநாதன், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் அறங்காவலர்கள் டாக்டர் அன்புராஜன், செல்வின், மருதநாயகம், மருத்துவ அதிகாரிகள் விமல், கிப்ட்நார்மன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கானஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்களும், புதுவாழ்வு சங்க குழுவினரும் செய்திருந்தனர்.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad