திருச்செந்தூர் வைகாசி விசாகம் சிறப்பு ரயில்கள் இயக்கம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 May 2024

திருச்செந்தூர் வைகாசி விசாகம் சிறப்பு ரயில்கள் இயக்கம்.

 


திருச்செந்தூர் வைகாசி விசாகம் சிறப்பு ரயில்கள் இயக்கம்.


திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வருகிற 22ந் தேதி புதன்கிழமை வைகாசி விசாகத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதன்படி 22ந் தேதி புதன்கிழமை திருநெல்வேலியிலிருந்து வண்டி எண் 06857 சிறப்பு பயணிகள் ரயிலானது காலை 6:40 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.


மேலும் வண்டி எண் 06859 சிறப்பு பயணிகள் ரயிலானது காலை 11:25 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 1:00 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.


மறு மார்க்கத்தில் வண்டி எண் 06858 சிறப்பு பயணிகள் ரயிலானது காலை 9:15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.


மற்றொரு சிறப்பு பயணிகள் ரயில் வண்டி எண் 06860 திருச்செந்தூரிலிருந்து மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு அன்று மதியம் 3:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.


இவ்வாறு தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் #ஏரல் தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad