திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆய்வு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று (27.05.2024) திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலைவன்வடலி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தணிக்கை செய்து, இரவு நேரங்களில் ஒளிரும் ஜாக்கெட்டுகள், டார்ச் லைட் மற்றும் லத்தி ஆகியவற்றை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
மேற்படி நிகழ்வுகளின் போது திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. மாயவன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ராமேஸ்வரி, ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மாரியப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. அரிக்கண்ணன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment