மங்கலகுறிச்சியில் கோவில் கொடை விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 May 2024

மங்கலகுறிச்சியில் கோவில் கொடை விழா.


 மங்கலகுறிச்சியில் கோவில் கொடை விழா.


ஏரல், மே.28, மங்கலகுறிச்சியில் சுமார் 30 வருட பழமையான, சைவ வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வீரமாகாளி மற்றும் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா மே.27 முதல் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.


இன்று நடைபெற்ற விழாவில் பெருங்குளம் செங்கோல் மடம் ஆதீனம் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


பின்னர் கொடை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மே.28 மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.


இன்று மதியம் நடைபெற்ற கொடை விழாவில் சிறியவர் முதல் பெரியவர் வரை அருள் வந்து சாமி ஆடினர்.


தூத்துக்குடி மாவட்டம் & ஏரல் தாலுகா தென்மங்கள் ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் - தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad