தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் - மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 5 April 2024

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் - மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 05, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று 05.04.24 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. 

இப்பயிற்சியின் போது கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஆர்.ஐஸ்வர்யா, ஒட்டப்பிடாரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கல்யாண குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் 218.கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு இன்று 05.04.24 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜேன் கிறிஸ்டி பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.


விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் 213.விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு இன்று 5.4.24 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. 

இந்த பயிற்சியின் போது விளாத்திகுளம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கு.உஷா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முரளி கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad