தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே மங்களகிரி டிவைன் மெர்சி தியான இல்லம் சார்பில் அப்பா வீடு என்ற தூத்துக்குடி மறைமாவட்ட தியான இல்லம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஆயர் ஸ்டீபன் அந்தோணி வருகை புரிந்தார். அவரை மங்களகிரி டிவைன் தியான மையம் இயக்குநர் கிராசிஸ் மைக்கேல் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் புதிதாக கட்டப்பட்ட தியான இல்ல தங்குமிடம் முன்பு சிறப்பு பிரார்த்தனை செய்து புதிய தியான இல்ல தங்குமிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம், முன்னாள் இயக்குனர்கள் மகிலன், சேவியர், அருட்தந்தையர்கள் அமலன், சகாயம், வில்லியம், மரியதாஸ், ரினோ மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி வருகை புரிந்த ஆயர் ஸ்டீபன் அந்தோணியிடம் பக்தர்கள் ஆசிபெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை டிவைன் மெர்சி தியான இல்ல இயக்குனர் கிராசிஸ் மைக்கேல் செய்திருந்தார்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment