நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பகால மாணவர்கள் கூடுகை! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 April 2024

நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பகால மாணவர்கள் கூடுகை!

 




நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்பகால மாணவர்கள் கூடுகை!


நாசரேத், ஏப். 28:நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி ஆரம்ப கால மாணவர்கள் கூடுகை  நடை பெற்றது.     
                              
நாசரேத், ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி துவங்கிய வருடத்தில் முதன் முதலில் பயின்ற மாணவர்கள் 25ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அம்மாணவர்க ளின் கூடுகை  நடைபெற்றது.  தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல லே செயலரும் கல்லூரியின் தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் முதன்மை உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக சென்னை கிங்ஸ் மருத்துவ கல்லூரி இயக்குனரும்  பாலிடெக்னிக் கல்லூரி துவக்க காலத்தில் முதல்வராக பணியாற்றி யவருமான முனைவர் குமார் சார்லி பால் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர். கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ்  ஞானதாசன் நன்றி கூறினார். விழாவில் கல்லுரி ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களின் குடும் பத்தினர்களும்கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான  ஏற்பாட்டினை முன்னாள் மாணவர்கள் சுரேஷ், ஆனந்த்,கதிர்வேல்ராஜா,கந்தசாமி,  லிவிங்ஸ்டன் நவராஜ்  மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad