மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிதேர்தல் இருக்காது. சர்வாதிகாரம் மட்டுமே மிஞ்சும்......
தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் கனிமொழி கருணாநிதி சாத்தான்குளம் அருகிலுள்ள பேய்குளம் பஜாரில் கூடியிருந்த மக்களிடையே பேசியதாவது:-
இந்தத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரியாக மோடி செயல்படுவார். மினிமம் பேலன்ஸ் சரிவர பராமரிக்கவில்லை என 21 ஆயிரம் கோடியை ஏழை எளிய மக்களிடம் இருந்து அபகரித்தது இந்த மத்திய அரசு. வெள்ள மழை புயல் காலங்களில் தமிழ்நாட்டுக்கு வராத மோடி தற்போது தேர்தல் என்றவுடன் அடிக்கடி வருகிறார். இதுவரை வெள்ள நிவாரணத் தொகை ஒரு ரூபாய் கூட தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. 100 நாள் வேலையை நிறுத்துவதற்கு மத்திய அரசு முயல்கிறது. அதற்கு உரிய நிதியை ஒதுக்குவது இல்லை. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை 150 நாள் வேலையாக மாற்றப்படும் அதற்கு 400ரூபாய் கூலி வழங்கப்படும்.

No comments:
Post a Comment