இதனை பொறுக்காத தலைமை இவரை வணிகர் சங்கத்தில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் மாநில தலைவர் விக்கிரமராஜா நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக காமராஜ் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின்கீழ் உள்ள வணிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு திருச்செந்தூர் குறிஞ்சி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டதாக காமராஜ் தெரிவித்தார்.
இதன் பின் தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்களை ஒன்றுதிரட்டி புதிய வணிகர் சங்க அமைப்பை உடனடியாக தொடங்குவது எனவும். அதற்கான புதிய கொடி மற்றும் பெயர் அறிமுகப்படுத்தபடும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டம் தலைவர் நாகராஜன் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யாபேஷ் மற்றும் தூத்துக்குடி தொழிலதிபர் மாலைசூடி அற்புத ராஜ் முன்னிலை வகித்தனர் காயல்பட்டினம் புறநகர் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் ரத்தினபுரி தலைவர் குருசாமி துணைத்தலைவர் வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம் தலைவர் ராசு.முருகேசன்நாடார் செயலாளர் இசக்கி முத்து மற்றும் உறுப்பினர்கள் குரும்பூர் நாடார் வியாபாரிகள் மகமைசங்கம் சார்பாக தலைவர் கிஷொக் முருகானந்தம் பொருளாளர் மகேஷ் மற்றும் உறுப்பினர் தட்டார்மடம் வியாபாரிகள் சங்கம் தலைவர் ராஜ் மற்றும் துணை தலைவர் ராமர் அவர்கள் உடன்குடி வணிகர் சங்கம் தலைவர் அம்புரோஸ் செயலாளர் சதிஷ் ஆலோசகர் கணேசன் மெய்ஞ்ஞான புரம் வியாபாரிகள் சங்கம் தலைவர் ராஜபிரபு தலைமையிலும் நாசரேத் வணிகர் சங்கம் சார்பாக செயலாளர் செல்வன் மற்றும் ஜான் குலசை ஜெயசீலன் தளவாய்புரம் சசிக்குமார் பள்ளத்தூர் ஜெயபால் மற்றும் பாலசுப்பிரமணியன் திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத் செயலாளர் செல்வகுமார் மற்றும் பொருளாளர் செல்வின் சார் துணைத்தலைவர் அழகேசன் முருகன் துணைச் செயலாளர் சத்தியசீலன் பாலமுருகன் ஐசக் பார்த்தீபன் மற்றும் நிர்வாகிகள் யாதவர் வியாபாரிகள் சங்கம் தலைவர் பெரியசாமி சைவ வேளாளர் ஐக்கிய மகமைசங்கம் பார்த்தசாரதி மற்றும் மீனாட்சிசுந்தரம் தலைமையிலும் சன்னதி தெரு வியாபாரிகள் பட்டு மதன் பெருமாள் செந்தில் குமார் ஒளி முத்து மற்றும் விநியோகஸ்தர் சங்கம் ராஜா மற்றும் ஜெயசீலன் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் கவாஸ்கர் லெட்சுமணன் மற்றும் பட்டு ராஜ் நாட்டாமை என்ற வாழ்வு ராஜா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வியாபாரிகள் சங்கம் பொருளாளர் சரவணன் மற்றும் தமிழ்நாடு மாற்று திறனாளி வணிகர் சங்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் இசக்கி முத்து சொர்ணசெல்வம் நாகநாதன் உள்பட 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகம் முழுவதும் வணிகர்களை ஒருங்கினைத்து புதிய வணிகர் சங்கம் தொடங்குவது பெயர் மற்றும் கொடி அறிமுகபடுத்துவது என ஏகமானதாய் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:
Post a Comment