3-வது முறை பிரதமராக மோடி வருவது உறுதி; நாசரேத்தில் ஜி.கே. வாசன் பேச்சு! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 4 April 2024

3-வது முறை பிரதமராக மோடி வருவது உறுதி; நாசரேத்தில் ஜி.கே. வாசன் பேச்சு!


தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் எஸ்.டி.ஆர்.விஜயசீலனுக்கு ஆதரவு கேட்டு நாசரேத் பேருந்து நிலையம் அருகில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், இங்கு கூடியிருக்கும் பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியும், மலர்ச்சியும் அமைந்திருப்பது வெற்றிக்கு அடையாளம் என்றே கருதுகிறேன். 

இந்தியா பாதுகாப்பாகவும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாகவும் அமைய மோடி மூன்றாவது முறை  பிரதமராக வருவது உறுதி. மோடி தலைமையில் இந்தியா நல்லரசாக வல்லரசாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆளுமைமிக்கவர் மோடி தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் பற்று பாசம் கொண்டவர் பிரதமர் மோடி. திருக்குறளை உலகமெங்கும் பறைசாற்றி வருபவர். செங்கோலுக்கு உரிய மரியாதையை கொடுத்து பாராளுமன்றத்தில் நிறுவியவர் பிரதமர் மோடி. மத்தியிலே நல்லாட்சி அமையவும், வளமான பாரதம் உருவாகவும், வலிமையான இந்தியாவாக மாறவும்  சிறுபான்மை மக்களின் எண்ணங் களை பாராளுமன்றத்தில் பிரதிபலித்திடவும், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உங்களது வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனுக்கு  சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். 


பொய் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகள் கேட்டு வரும் திமுகவிடம் ஏமாற வாக்காளர்கள் ஏமாளிகள் அல்ல. எனவே சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து எஸ்.டி.ஆர்.விஜயசீலனை வெற்றி பெறச்செய்யுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நாசரேத் பேருந்து நிலையம் அருகே வந்தடைந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசனை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாஜக மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் பாஜக நகர தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் பாஜகவி னர் பேண்ட் வாத்தியங்கள், வாண வேடிக்கைகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


- நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad