திருச்செந்தூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! குடிநீர் வசதி இல்லாததால் அவதி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

திருச்செந்தூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! குடிநீர் வசதி இல்லாததால் அவதி!

 


திருச்செந்தூரில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! குடிநீர் வசதி இல்லாததால் அவதி!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து உச்சிகால அபிஷேகமும் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு 'சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றது. 


தமிழ் புத்தாண்டு மற்றும் விடுமுறை தினம் என்பதால் தமிழகம் மற்றும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் வெவ்வேறு மாநிலங்களில்  இருந்தும் திரளான பக்தர்கள் குவிந்தனர்.  


அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு தினம் என்பதால் சுமார் 6 மணிநேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. பக்தர்களுக்கு கோவிலில் தகுந்த வசதிகள் இல்லாததால் மிகவும் வருத்தமடைந்தனர்.


6 மணி நேரம் நின்று சுவாமி தரிசனம் செய்ய போனால் கோவிலில் குடிநீர் வசதி கூட  இல்லாததால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.


திருச்செந்தூர் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் மற்றும் வாகன மிகுதியால் போக்குவரத்து 2 மணி நேரத்திற்கு மேல் ஸ்தம்பித்தது.

No comments:

Post a Comment

Post Top Ad