நாசரேத் நகர திமுக சார்பில் வீடு, வீடாக சென்று கனிமொழி கருணாநிதிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தனர். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு நாசரேத் நகர திமுக சார்பில் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமையில் நாசரேத் பேரூராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று துண்டு பிரதிகள் கொடுத்து வாக்குகள் சேகரித்தனர்.
இந்நிகழ்வில் நாசரேத் நகர திமுக அவைத் தலைவர் கருத்தையா, மகளிரணி ஜூலியட், மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், வார்டு செயலாளர் உடையார், சந்திரன், விடுதலைச் சிறுத்தை நிர்வாகி மரிய சூசை உட்பட திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment