தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க.கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள எஸ்.டி.ஆர்.விஜயசீலனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.திருச்செந்தூர் தெற்குரதவீதி தெப்பகுள விளக்கில் பிரசார வாகனத்தில் நின்றவாறு அவர் பேசினார்..அவர் பேசியதாவது:- இந்த தேர்தல் மத்தியில் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல் தமிழ் மாநில தேர்தலல்ல. மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பிரதமராவது உறுதி. தூத்துக்குடி தொகுதியில் களம்காணும் பாஜக கூட்டணியில் ஒத்திசைவு கொள்கை கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயசீலன் வேளிமாவட்டமோ வெளிமாநிலத்தவரோ இல்லை சென்னையிலிருந்து தூத்துக்குடி வருவதென்றால்கூட பல மணிநேரம் ஆகும். விமானத்தில் பறந்து வருவதாக என்றாலும் விமானம் எந்த நேரத்தில் கிளம்புமோ அந்த நேரத்தில்தான் பயணம் செய்து தூத்துக்குடி வரவேண்டும். ஆனால் விஜயசீலன் இந்த மண்ணின் மைந்தர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அடிப்படை வசதியான நவீன கழிப்பிடம் குடிநீர் வாகன நிறுத்துமிடம் இல்லாமல் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்சணைக்கு வழி காணப்படும். தமிழகத்திற்காக மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக செலவிடப்படாமல் வெளிப்படை தன்மையின்றி வேறு வழியில் பயன்படுத்தப்படுகிறது.மக்கள் பிரச்சணைகளுக்கானதை திமுக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதில்லை.
பக்தர்கள் வியாபாரிகள் அதிகம் பயன்பெறுவதால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அல்லாது கூடுதலாக விரைவு ரெயில் இயக்க முயற்சி செய்வோம்.மேலும் சென்னை_நெல்லை வந்தே பாரத் ரெயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வலியுறுத்தி கொண்டுவருவோம்...ஒத்திசைவு உள்ள த.மா.க.வேட்பாளர் விஜயசீலன் வென்றால் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு மேலும் அவர் பேசினார்.அவருடன் பா.ஜ.க.தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தெற்கு மாவட்ட பொது செயலாளர் சிவ முருகன் ஆதித்தன் திருச்செந்தூர் நகர தலைவர் நவ மணிகண்டன், சண்முகநாதன் மற்றும் திரளான பா.ஜ.க.நிர்வாகிகள்,பா.ம.க.,அமமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாஜக மகளிரணி தொண்டர்கள் பொதுமக்கள் திரண்டுவந்திருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்திகள்.

No comments:
Post a Comment