ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரா பௌர்ணமி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 April 2024

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரா பௌர்ணமி

 


ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரா பௌர்ணமி.  



தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் முதன்மை ஆனது ஸ்ரீவைகுண்டம். ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரா பௌர்ணமி நாளில் சுவாமி கள்ளபிரான் ஆற்றின் கரையில் உள்ள கிருஷ்ணன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளுவார்.  சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். திருமஞ்சனம்,நித்தியல் கோஷ்டி, 11 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். நாலாயிர திவ்ய பிரபந்தங்கள், சாத்து முறை, மாலை 6 சாயரட்சை, 7 மணிக்கு உற்சவர் கள்ளபிரான் தாயார்களுடன் தோளுக்கினியானில் நதிக்கரையில் உள்ள கிருஷ்ணன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் 8 மணிக்கு தீபாராதனை,9 மணிக்கு சாத்து முறை கோஷ்டி,தீர்த்தம்,சடாரி, பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் தேவராஜன் கண்ணன், அறங்காவலர் தலைவர் அருணாதேவி கொம்பையா, மாரியம்மாள் சண்முகசுந்தரம், முருகன் முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன்,நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன்,ஆய்வாளர் நம்பி உட்பட பக்தர்கள் பலர் கவந்து கொண்டனர்.


நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad