அமுதுண்ணாகுடி ஊராட்சியில் மக்களவை தேர்தல் விழிப்புணர்வு
2024 மக்களவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளை பதிவு செய்வதற்காக அனைத்து தரப்பினரிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அமுதுண்ணாகுடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) சின்னத்துரை முன்னிலை வகித்தார்.
அமுதுண்ணாகுடி ஊராட்சியில் சாத்தான்குளம் -- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள அமுதுண்ணாகுடி குளத்தில் அமைந்துள்ள கலுங்கில் *எனது வாக்கு எனது உரிமை* 100 விழுக்காடு வாக்களிப்போம் வாசகங்கள் எழுதப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் 100 விழுக்காடு வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அமுதுண்ணாகுடி ஊராட்சி செயலர் ஜார்ஜ் சிங்கதுரை மற்றும் திட்டபணி ஒருங்கிணைப்பாளர் பொன்செல்வி ஆகியோர் செய்திருந்தனர் .
நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment