நாசரேத்தில் மூடி கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில் டைட்டல் பார்க்கோ அல்லது பெரிய தொழிற்சாலையோ கொண்டு வரப்படும்!இந்தியா கூட்டணியின் வேட்பாளர் கனிமொழி கருணாநிதி பேச்சு!!
நாசரேத்தில் மூடிக் கிடக்கும் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில் டைட்டல் பார்க்கோ அல்லது வேறு தொழிற் சாலைகளோ கொண்டு வரப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி யின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணா நிதி நாசரேத் பேருந்து நிலையம் அருகே பேசினார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி யின் சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணா நிதி நாசரேத் பேருந்து நிலையம் மக்களிடையே பேசியதாவது:-
நாசரேத்தில் கூடியிருக்கும் வாக்காளர்களின் முகத்தில் ஏற்பட் டிருக்கும் முகமலர்ச்சியை பாரக்கின்ற போது வெற்றி நிச்சயம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக் குடி தொகுதியை நான் எனது 2-வது தாய் வீடாக கருதி பணி ஆற்றி வரு கிறேன்.உங்களது அன்பைப் பெற்ற நான் மீண்டும் உங்களோடு பணி யாற்றக் கூடிய வாய்ப்பை எனக்கு தாருங்கள்.
நாசரேத்தில் அமைந்திருந்த திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை தற்போது மூடிக்கிடக்கி றது.மூடிக்கிடக்கும் இந்த தொழிற் சாலை அமைந்துள்ள இடத்தில் அதைவிட சிறந்த தொழிற்சாலை களோ அல்லது பெரிய தொழிற்சா லைகளோ அல்லது டைட்டில் பார்க் திட்டமோ கொண்டு வரப்படும்.
நாசரேத் பேரூராட்சியில் எனது தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஜி.எஸ்.டி. பிரச்சனைகளினால் சிறு குரு தொழிலாளர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சி யமைக்கும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. குழப்பங்கள் விரைவில்சரிசெய்யப் படும்.
சமீபத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட் டவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 6,000 த்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.ஆனால் ஒன்றிய அரசின் பிரதமர் மோடியோ தமிழகத்திற்கு நிவாரணமும் தரவில்லை, நிதியும் தரவில்லை.எனவே ஒன்றியஅரசை மாற்றவேண்டியநேரம்வந்துவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் நடக்காது. சர்வாதிகாரம்தான் ஓங்கும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசில் 30 லட்சம்வேலை வாய்ப்பு பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் 30லட்சம் வேலை வாய் ப்பு பணியிடங்கள் நிரப்பப்படும். அதில் நமக்கு முன்னுரிமை வழங் கப்படும்.இந்தியா கூட்டணியானது கொடுத்த வாக்கை நிறைவேற்று வோம். எனவே இந்தியா கூட்டணி வெற்றி பெற உதயசூரியன் சின் னத்தில் வாக்களித்துவெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
வேட்பாளருடன் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான ஊர்வசி எஸ் அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மகளிர் அணி ஜெசி பொன் ராணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
முன்னதாக நா ஸ்ரீத் வருகை தந்த வேட்பாளருக்கு நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏஐடியூசி கிருஷ்ணராஜ், நகர காங். தலைவர் செல்வகுமார், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வக்குமார், துணைத் தலைவர் அருண் சாமுவேல், திமுக மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன், கஸ்தூரி, காங்கிரஸ் பிரமுகர்கள் எட்வர்ட் கண்ணப்பா, செல்வின், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத் நிக்சன் செய்தியாளர்.

No comments:
Post a Comment