தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி எம்.பி.,க்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் திமுகவினர் ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த வகையில் முன்னாள் திமுக எம்.பி., ஜெயத்துரை தனது ஆதரவாளர்களுடன் மாலை ஆழ்வார்திருநகரியில் பஜார், பஸ் ஸ்டாண்ட் ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களுக்கு பஸ் ஸ்டாண்டில் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் டீ கடைகளில் வீதிகளில் நேரில் சந்தித்து துண்டுபிரசுரங்களை வழங்கி வீதி வீதியாக நடந்து சென்று ஆதரவு திரட்டினார், அதனைத்தொடர்ந்து பொதுமக்களிடம் பேசியதாவது கடந்த டிசம்பர் மாதம் தாமிரபரணி மழைவெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்டிடும் பணிகளை முதல்வர் தலைமையில் அனைத்துதுறை அமைச்சர்கள், அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு நிவாரணம் தராதபோதும் தமிழக முதல்வர் துரிதமாக நிவாரணம் வழங்கியதுடன், வீடு கட்ட நிதியுதவியும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் போன்றவற்றையும் துரிதமாக வழங்கினார். இதனை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரும் வெற்றியை தந்திடவேண்டும்.
தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி பெற்றிட நீங்கள் அனைவரும் இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்பிஅவர்களை மீண்டும் வெற்றி பெற வைத்திடவேண்டும் என்று பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றார். வாக்கு சேகரிப்பின்போது, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் நட்டாத்தி காளிதாஸ் பண்ணையார், முன்னாள் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் இசக்கியப்பன், திமுக ஒன்றிய துணைச் செயலாளர் பன்னீர்தாஸ், மங்களபுரம் பட்டுராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பட்டாணி சேகர், வார்டு செயலாளர் அண்ணாமலை, முன்னாள் நகர செயலாளர் தாமஸ், நகர பிரதிநிதி முருகன், முன்னாள் விவசாய அணி வேல்நயினார், நகர பிரதிநிதி பரமசிவன், பெருங்குளம் நகர செயலாளர் பாலமுருகன், நகர பொருளாளர் செல்லையாபாண்டியன், நிர்வாகிகள் லட்சுமணன், துரை இளைஞர் அணி துணைச் செயலாளர் மகேஷ, விவசாய சங்கத் தலைவர் தர்மலிங்கம், கிளைச் செயலாளர்கள் முருகேசன், முத்துசாமி, மாரியப்பன், இலக்கிய அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் மைதீன், அப்துல் கரீம், அணி அமைப்பாளர் சகாயம், இளைஞர் அணி வசந்த் ,துணைச் செயலாளர் வெங்கடேஷ், பிரதிநிதிகள் பழனிராஜன், மாயாண்டி, ,சுடலை, இசக்கி, அவைத்தலைவர் மாரியப்பன், பூத்து கமிட்டி, பொருளாளர் சங்கர், பூத்து கமிட்டி சேர்மன், துணைச் செயலாளர் பேச்சிமுத்து, இளைஞரணி நவாப் ,இப்ராஹிம், பொருளாளர் சாலிப் ,ஆறாம் பண்ணை கிளை நிர்வாகிகள் அப்துல் ஹரீம், ஜின்னா, யூசுப், தலைமைக் கழகப் பேச்சாளர் ராகவன், பிச்சையா, மகாராஜா, அப்துல்காதர், இளைஞரணிச் செயலாளர் கார்த்தி கேசன், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய பிரதிநிதி பொன்ராஜ், சிவராமங்கலம் மாரியப்பன், தேவர் பிரான் ,சங்கரலிங்கம், முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment