கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் 254-வது பிறந்த தினவிழா(16.04.2024) - அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 April 2024

கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கம் 254-வது பிறந்த தினவிழா(16.04.2024) - அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடல்.

தூத்துக்குடி மாவட்டம், ஏப்ரல் 13,
கவர்னகிரி கிராமத்தில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது 254-வது பிறந்த தினவிழா (16.04.2024) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள்  அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரி கிராமம் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் அவரது 254-வது பிறந்த தினவிழா (16.04.2024) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பட்டியலில் கண்ட அரசு டாஸ்மாக் மதுபான¡ கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள்  அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். 


மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றையதினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது.
மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி  தெரிவித்துள்ளார்.
                                      

படம் - மதுபானக் கடைகளின் விபரம்.

No comments:

Post a Comment

Post Top Ad