சித்ரா பெளர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் தூத்துக்குடி மாவட்டவிஸ்வகர்மா சமூகத்தினர் வழங்கினர் . - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 April 2024

சித்ரா பெளர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் தூத்துக்குடி மாவட்டவிஸ்வகர்மா சமூகத்தினர் வழங்கினர் .


சித்ரா பெளர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் தூத்துக்குடி மாவட்டவிஸ்வகர்மா சமூகத்தினர் வழங்கினர் .


தூத்துக்குடி , ஏப். 25 இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி அருள்மிகு ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி விஸ்வ பிரம்மா சமூகத்தினர் சார்பில் 15 வது ஆண்டு விழா நடைபெற்றது. காலையில் சுவாமிக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. 11 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 300க்கும் மேற்றப்பட்ட பெண்கள் விளக்குபூஜை செய்தனர். 12 மணிக்கு மேல் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது 2000க்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்துகொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட விஸ்வகர்மா சமூகத்தினர்கள் நிர்வாக கமிட்டியினர்கள் ஆன்மீக செம்மல் பதம நாபன்.கிருஷ்ணன். ராமஜெயம் சிவபெருமாள்.கணேசன், ராமசாமி. பூச்சிக்காடு செல்வராஜ், திருமலைச் செல்வம், மற்றும் பிரதோஷ கமிட்டி தலைவர் உதயகுமார், செயலாளர் சசிதரன், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு செய்து இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக   திருச்செந்தூர்  தாலூக்கா செய்தியாளர் MT.அந்தோணி ராஜா
 தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad