முதலூர் - இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு மெகா டிஜிட்டல் ஒலி ஓளி மேடை நாடகம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 1 April 2024

முதலூர் - இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு மெகா டிஜிட்டல் ஒலி ஓளி மேடை நாடகம்.

தூத்துக்குடி மாவட்டம், முதலூர், ஏப்ரல் 1, தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தொடர்புத்துறை மூலமாக முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஈஸ்டர் தினத்தன்று இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு மெகா டிஜிட்டல் ஒலி ஓளியாக நந்தகோபாலபுரம் நல்மேய்ப்பர் நற்செய்தி குழுவினரால் தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.


நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக பிரதம பேராயரின் ஆணையாளரும் திருமண்டல பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் ஆசியுடன் உபதலைவர் குருவானவர்  தமிழ்ச்செல்வன் ஜெபம் செய்ய லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் வாழ்த்துரை வழங்க, திருமண்டல குருத்துவ செயலர் குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக்,  உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல பொருளாளர் குருவானவர் டேவிட்ராஜ், முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தராஜா ரெத்னராஜ் முன்னிலையில் நடைபெற்றது.


அனைத்து சபைமன்ற தலைவர்கள், திருமண்டல துறை செயலர்கள், இயக்குனர்கள், சேகர குருவானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருமண்டல நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்களை கன்வீனர் குருவானவர் செல்வன் மகாராஜா வரவேற்க, தொடர்புத்துறை செயலர் குருவானவர் பாஸ்கரன் கவுரவிக்க, கன்வீனர் குருவானவர் ரெனால்டு பாஸ்கரன் நினைவு பரிசு வழங்கினார்கள்.


இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறை மெகா டிஜிட்டல் ஒலி ஓளி காட்சியாக நந்தகோபாலபுரம் நல்மேய்ப்பர் நற்செய்தி குழுவிலுள்ள 180க்கும் மேற்பட்டவர்களால் தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.


சாத்தான்குளம் ஞாயிறு பாடசாலை, சாத்தான்குளம் துவக்கப்பள்ளி, நல்லம்மாள்புரம் ஞாயிறு பாடசாலை, நல்லம்மாள்புரம் துவக்கப்பள்ளி, முதலூர் ஞாயிறு பாடசாலை, வாலிபர் ஐக்கிய சங்கம், முதலூர் துவக்கப்பள்ளி, முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப்பள்ளி குழுவினர்,  உட்பட 150க்கும் மேற்பட்ட மாணவிகளின் சிறப்பு நடனங்கள் நடைபெற்றது.


திருமண்டல  அளவில் பல்வேறு ஊர்களிலிருந்து 6000க்கும் மேற்பட்டோர் நேரிலும் 5000க்கும் மேற்பட்டவர்கள் நேரலையிலும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். 


விழா ஏற்பாடுகளை கன்வீனர்கள் குருவானவர் செல்வன் மகாராஜா குருவானவர் ரெனால்டு பாஸ்கரன் ஆகியோர் செய்திருந்தார்கள். தொடர்புத்துறை செயலர் குருவானவர் பாஸ்கரன் நன்றியுரை வழங்கினார்கள். திருமண்டல பொருளாளர் குருவானவர் டேவிட்ராஜ் ஜெபிக்க
திருமண்டல குருத்துவ செயலர் குருவானவர் இம்மானுவேல் வான்ஸ்றக்  ஆசி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad