மேலும் மரங்களும் வளர்த்து வைத்துள்ளார். 10 சிசிடிவி கேமரா பொறுத்தி கண்காணித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 27ஆம்தேதி பிறகு மொபைல் கேமரா இயங்கவில்லை. அப்போது எமி சென்னையில் இருந்ததால் சொக்கன் குடியிருப்பு அந்தோணி மலையப்பன் என்பவர் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 9 கேமரா இல்லையெனவும், 7 பூட்டுகள் உடைப்பட்டு கிடந்ததும், முக்கிய ஆவணங்கள், மற்றும் மின்சாதன பொருள்களை எடுத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மறுநாள் எமி போய் பார்த்தபோது 5லட்சம் மதிப்பிலான பொருள்கள் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.
இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது சாத்தான்குளம் சேகரகுருவானவர் டேவிட் ஞானையா, கொம்மடிக்கோட்டை சுகந்தராஜா, சுரேஷ்குமார் மனைவி கற்பகவள்ளி, அவரது மகன் ரிச்சிலயனேஸ்வரன், தட்டார்மடம் சண்முகநாதன், புத்தன்தருவைகுமார் மற்றும் தனபால், சாலமோன் ஆகியோர் ஈடுப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து எமி அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எமி, தட்டார்மடம் காவல் நிலையத்தி்ல சனிக்கிழமை புகார் செய்தார். புகாரின் பேரில் சேகரகுரு டேவிட் ஞானையா உள்ளிட்ட 8பேர்கள் மீதும் ஏட்டு கார்த்தி அருணாசலம், 147, 448, 380 (என்பி), 427, 294(பி), 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தார். தட்டார்மடம் உதவி ஆய்வாளர் , பொன்னு முனியசாமி, காவல் ஆய்வாளர் அனிதா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாசரேத் நிக்சன் செய்தியாளர்

No comments:
Post a Comment