திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் 4.19 கோடி உண்டியல் வருமானம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 14 April 2024

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் 4.19 கோடி உண்டியல் வருமானம்!

 


திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூபாய் 4.19 கோடி உண்டியல் வருமானம்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 43 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.19 கோடி கிடைத்துள்ளது.


உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் உண்டியல் எண்ணபட்டுவருகிறது.


இந்நிலையில் 43 நாட்களில் கிடைத்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.


திருக்கோயில்  அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை வகித்தார். 


திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலை வைத்தார். தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி திருச்செந்தூர் அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன்,  சுப்பிரமணியன்,  கருப்பன்,  சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர்,  கோயில் பணியாளர்கள் உண்டியல்  மூலம் கிடைத்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 

இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 4.கோடி 16 லட்சத்து 12 ஆயிரத்து 491ம்,  கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 53 ஆயிரத்து 532ம,  யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 98 ஆயிரத்து 196,  பங்குனி உத்திர திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து  21ம் கிடைத்தது ஆக மொத்தம் மொத்தம் ரூ. 4 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரத்து 240 கிடைத்தது.


இதில் தங்கம் 2300 கிராமும்,  வெள்ளி 46 ஆயிரம் கிராமும்,வெளிநாட்டு கரன்சி 781 ரூபாயும் உண்டியல் கிடைத்துள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad