தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், சங்கல்ப் திட்டநிதியுதவியுடன் நடத்தும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடிப்படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு என்ற ஒருவாரகால உள்வளாகப் பயிற்சிநடைபெற்றது.
இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 19 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவுவிழா நேற்று தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சிமையத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப. அகிலன் தலைமையேற்று பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் பேராசிரியர் ந.வ. சுஜாத் குமார் சிறப்புரை ஆற்றினார்.
கல்லூரியின் மீன்பிடி தொழில்நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீ.நீதிச்செல்வன் வரவேற்புரை வழங்கினார். மீன்வள உதவிஆய்வாளர் அக்னிகுமார், பயிற்சியாளர்களைத் தேர்வு செய்தார். பயிற்சிகள் பற்றி இரவிக்குமார் விளக்கவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் ஜெ. ஏஞ்சல் விஜய நிர்மலா நிதியுதவிபெற ஆவன செய்திருந்தார். உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரை ஆற்றினார். உதவிப் பொறியாளர் அ. அந்தோணிமிக்கேல் பிரபாகர், போசன் வி. மொளலின் சந்திரா முதுநிலைஆராய்ச்சியாளர் சே. அர்ச்சனா, த. பச்சையப்பன், வே. ராஜூ, முரிய அந்தோணி சுதாகர் மற்றும் இரா. சத்தியராஜ் ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.

No comments:
Post a Comment