தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், கீழ அருணாச்சலபுரம் ஊராட்சி, நடுக்காட்டூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணியையும், மணியக்காரன்பட்டி ஊராட்சி, தவசலிங்கபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 10- லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுமான பணியையும், மணியக்காரன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6- லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணியினையும், சிவலார்பட்டி ஊராட்சி, மேலப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்து இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் ஒன்றிய செயலாளர்கள் புதூர் மத்திய ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு மும்மூர்த்தி, வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், புதூர் மத்திய ஒன்றிய அவைத்தலைவர் ராமசுப்பு, கிளைச் செயலாளர்கள் காண்டீபன், மணிகண்டன், சுப்பையா, சூரியபாண்டி, ஜெயக்குமார், ராமலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment