காயல்பட்டினம் - பிரபல கால்பந்தாட்ட வீரர் பஷீர் அகமது காலமானார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 7 March 2024

காயல்பட்டினம் - பிரபல கால்பந்தாட்ட வீரர் பஷீர் அகமது காலமானார்.

.com/img/a/

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 7, காயல்பட்டினம் ஊரை சார்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் பஷீர் அஹ்மத் (வயது 46) இன்று காலமானார்.


காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சார்ந்த கால்பந்து வீரர் பஷீர் அஹ்மத். சென்னையிலுள்ள மெட்ராஸ் ஸ்போர்ட்டிங் யூனியன் (MSU) என்ற கால்பந்து அணியின் தலைவராக இருந்து உள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் சடோல் மாவட்டத்தில் 19.01.2011 முதல் 10.02.2011 வரை நடைபெற்ற தங்கக் கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியில் இவர் தலைமையில் விளையாடிய அவ்வணி இறுதிப் போட்டியில் வென்று தங்கக் கோப்பையைத் தட்டிச் சென்றது.


மொத்தம் 17 அணிகள் பங்கேற்ற இச்சுற்றுப்போட்டியில் காயல்பட்டினத்தைச் சார்ந்த வீரர் பஷீர் அஹ்மதுக்கு அதிக கோல் அடித்த வீரருக்கான விருதும், மூன்று போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது.


இப்படி பல சாதனைகள் புரிந்துள்ள பஷீர் அகமது காலமான செய்தி கேட்டு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad