காயல்பட்டிணம் சப்ரிஜிஸ்தார் ஆபீஸில் பத்திரம் பதிவு செய்ய மறுப்பு அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கம் அகில இந்தியமனித உரிமைகள் கவுன்சில் சார்பில் முற்றுகை பரபரப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 7 March 2024

காயல்பட்டிணம் சப்ரிஜிஸ்தார் ஆபீஸில் பத்திரம் பதிவு செய்ய மறுப்பு அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கம் அகில இந்தியமனித உரிமைகள் கவுன்சில் சார்பில் முற்றுகை பரபரப்பு.

photo_2024-03-07_17-54-07

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காயல்பட்டிணம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அரசு ஜி.ஓ. பிறப்பிக்காத நிலையில் திடிர்ரென நகராச்சி ஆனையளரின் உத்தரவின் படி VLT காலிமனை வரி பத்திரப்பதிவாளர்களிடம் பணம் கட்டிய ரசீது பெற்று வந்தால் தான் பத்திரம் பதிவு செய்யப்படும் என பத்திரப்பதிவு அதிகாரிகள் வாய்மொழியாக கூறியதை தொடர்ந்து ஒரு வார காலமாக பத்திரப்பதிவு எதுவும் நடைபெறவில்லை என கூறப்படுகின்றது. 

இதனை பத்திரம் பதிவு செய்ய வரும் பயணாளிகள் அதிகாரிகளிடம் கேட்டபோது எங்களுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டுள்ளது என கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்க தலைவர் ஹென்றியின் ஆலோசனைப்படி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு செயலாளர் மற்றும் அகில இந்திய மனித உரிமைகள் கவுன்சில் மாநில துணைத்தலைவர் ஆயுள் கால உறுப்பினர் அபுபக்கர் சித்திக் தலைமையில் ஆயுள் கால உறுப்பினர்கள் மாஷாஅல்லாதாவூத், லேன்ட் மார்க் மொய்தீன் அப்துல் காதர். எஸ்.எ.கே.மஹ்மூத் சுல்தான். மற்றும் உறுப்பினர்கள். பத்திரபதிவு சிவா. சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டார்.


இதனால் ஒரு வாரமாக பத்திரப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தால் மீண்டும் பத்திரப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.


- MT. அந்தோணி ராஜா, திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர். 

No comments:

Post a Comment

Post Top Ad