நாசரேத் அருகே மகளிர் குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 8 March 2024

நாசரேத் அருகே மகளிர் குழு தலைவி தூக்கிட்டு தற்கொலை.


நாசரேத் அருகிலுள்ள திருவள்ளுவர் காலணி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி லட்சுமி(52). இவரது கணவர் விஜயகுமார் கடந்த 15 ஆண்டுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.  லட்சுமி, மகளிர் சுய உதவிக்குழு மூலம் குழு உறுப்பினர்களுக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடன் வாங்கிய உறுப்பினர்கள், பணத்தை முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த நிறுவனங்கள், லட்சுமியிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். 

இதனால் மனமுடைந்த லட்சுமி சம்பவத்தன்று வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் நாசரேத் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் நாசரேத் சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 - நிக்சன் செய்தியாளர் நாசரேத்

No comments:

Post a Comment

Post Top Ad