நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 21 February 2024

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரியில் 17-வது பட்டமளிப்பு விழா!


நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல் லூரியில் 17வதுபட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். தாளாளர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன்  சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். கல்லூரியின் நிர்வாக அதிகாரி  வினோதா உறுதிமொழி வாசித்தார். விழாவிற்கு தூத்துக்குடி நாசரேத் திரு மண்டல உப தலைவர்  வி.எம்.எஸ்.தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தூய யோவான் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் கருணாகரன்  கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையாற்றி 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திருமண்டல நிர்வாகஸ்தர்கள் குருத்துவ செயலாளர்  இம்மானுவேல் வான்ஸ்டக், திருமண்டல 'லே' செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், திருமண்டல உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார், ராஜாசிங், கல்லூரி ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் நாசரேத் சேகர கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


விழாவிற்கான ஏற்பாடுகளை  முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாக அதிகாரி, பணியாளர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad