டைடல் பூங்காத் திட்டத்தை நாசரேத் - தில் அமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு மதிமுக இரஞ்சன் கோரிக்கை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 February 2024

டைடல் பூங்காத் திட்டத்தை நாசரேத் - தில் அமைத்து தர மாவட்ட ஆட்சியருக்கு மதிமுக இரஞ்சன் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத், பிப்.20, தூத்துக்குடி மாவட்டத்தில் டைடல் பூங்கா திட்டத்தை நாசரேத்தில் அமைத்து தர வேண்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் வே.இரஞ்சன், தூத்துக்குடி
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, 


மக்கள் நலன் சார்ந்து இயங்குகிற திராவிட வண்ண அரசு,தமிழ்நாடு முழுவதும் தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய நியோ டைடல் பூங்காக்கள் அமைக்க திட்டம் இட்டு உள்ளது.


மிக்க மகிழ்ச்சி..
வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். இதன் மூலம் 13000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும்.


தூத்துக்குடி மாவட்டத்தில் அமைய இருக்கிற டைடல் பூங்காத் திட்டத்தை,
எந்த தொழில் நிறுவனங்களும் அற்ற 
தென் பகுதியில் அமைத்தால்,
இப்பகுதி மக்களுக்கு நலம் பயக்கும்.

மேலும்,
இப்பூங்கா அமைக்க ஏரல் வட்டம்,
நாசரேத்தில் இயங்கிய திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பு ஆலை மூடப் பட்டதால்,
கிட்டதட்ட 25 ஏக்கர் நிலம் பயன் பாடு அற்றுக் கிடக்கிறது.


மேலும்,
நாசரேத்து மற்றும் அதன் சுற்றுப்புறம் படித்த மென் பொறியாளர்கள் மிகுந்த 
பகுதி. மேலும்,தொழில் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியப் பகுதி ஆகவே, திராவிட வண்ண அரசு 
இத்திட்டத்தை நாசரேத்தில் நிறைவேற்றி தந்து, இப்பகுதி தொழில் வளர்ச்சிக்கு துணை புரிய, தாங்கள் ஆவனச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.


அது தவிர, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
கனிமொழி அவர்களும்,
அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் அவர்களும் நாசரேத்து மீது அதிக அக்கறைக் கொண்டவர்கள் என்றும்
அதன் அடிப்படையில்,
இத்திட்டம் நாசரேத்தில் அமைய துணை நிற்பார்கள் என நாசரேத்து வட்டார மக்கள் நம்புகின்றனர் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad