வைப்பாரில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சைக்கிளில் வந்த முருக பக்தர்கள்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 February 2024

வைப்பாரில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சைக்கிளில் வந்த முருக பக்தர்கள்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பாரில் இருந்து 100 முருக பக்தர்கள் சைக்கிளில் யாத்திரையாக வந்தனர். உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இதுதவிர தை பொங்கல்,தைப்பூசம்,மாசி திருவிழா போன்ற நாட்களில் பக்தர்கள்  பாதயாத்திரையாக சென்று கடலில் குளித்து, முருகனை தரிசிப்பது ஆண்டாண்டு காலமாக வழக்கம்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருடந்தோறும் சைக்கிள் யாத்திரையாக வருவது வழக்கம்.  முன்னதாக சைக்கிள் யாத்திரை குழு வைப்பாரில் உள்ள 500 வருட பழமையான சிவன் கோவிலில் இருந்து 41வது ஆண்டாக குருசாமி ராஜகோபால் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்பு 100 பக்தர்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாதயாத்திரை தொடங்கினர்.


தொடர்ந்து இந்த பாதயாத்திரையானது கிழக்குக் கடற்கரை சாலை வழியாக தூத்துக்குடி வந்து பின்பு திருச்செந்தூர் பிரசாத் நகரில் உள்ள ரயிலடி விநாயகர் கோவிலுக்கு வந்தடைந்தது பின்பு குருசாமி தலைமையில் பஜனைகள் பாடி சாமியை வழிபட்டு, திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று  இரவு தங்கத்தேர் இழுத்து அதிகாலையில் கடலில் நீராடி பால்குடம் எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் வைப்பார் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக-தூத்துக்குடிமாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad