தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியின் ஆண்டு விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சி சரளா AO தலைமையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சிலுவைமணி கிரேஸ் முன்னிலையில் தொடங்கி பள்ளியின் மாணவ, மாணவியர் கலை நிகழ்ச்சி, நாடகம் போன்றவை பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைப்பெற்றது, பின்பு பள்ளி ஆசிரியர் சிவசக்தி நன்றியுரை ஆற்றினார்.
இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் வைப்பார் வில்லாயுத முடையார் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் ஹரிஹரன் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வுக்கு தேவையான பொருட்கள் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியிரின் பெற்றோர்கள், கிராம பெரியவர்கள், ஊர் தலைவர்கள், பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்.


No comments:
Post a Comment