பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சபை மன்ற அளவிலான வேத ஆராய்ச்சி கூடுகை! திரளானோர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 February 2024

பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சபை மன்ற அளவிலான வேத ஆராய்ச்சி கூடுகை! திரளானோர் பங்கேற்பு.


பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் நடந்த சபை மன்ற அளவிலான வேத ஆராய்ச்சி கூடுகையில் திரளானோர் பங்கேற்றனர். தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் சேகரம்  பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் வேத ஆராய்ச்சி கூடுகை  நிகழ்ச்சி நடந்தது.

பிரகாசபுரம் சேகரத்தலைவர் நவராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க  இயக்குனர்  ராபின்சன் தேவ செய்தி கொடுத்தார். இதில் குருமார்கள் ஆசீர் சாமுவேல்,  செல்வராஜ் , பால்ராஜ் மற்றும் சபை மன்றத்தில்  உள்ள ஆண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கனோன்  ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப், சேகரத்தலைவர் நவராஜ், சபை ஊழியர் ஸ்டான்லி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ராபர்ட், ஞானராஜ், சேகர செயலாளர் மோகன்சிங், பொருளாளர் சாமுவேல், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஸ்டீபன்,  பிரகாசபுரம்  ஆண்கள் ஐக்கிய சங்க பொறுப்பாளர் தங்கதுரை, ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இம்மானுவேல், ஆலய  பணியாளர் டிக்சன் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad