ஸ்ரீவைகுண்டம் - குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 February 2024

ஸ்ரீவைகுண்டம் - குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.18, ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போனவரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.


ஸ்ரீவைகுண்டம், அருகே புதுக்குடி தேரடி தெருவை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (36) என்பவர் கடந்த 17.11.2023 அன்று குடும்ப பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தினர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.


இதுகுறித்து மேற்படி கணேசன் மனைவி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், மேற்படி கணேசன் என்பவரை கண்டுபிடிக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரெடரிக் ராஜன் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமைக் காவலர்கள் மணிகண்டன், சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் (மற்றொரு) மணிகண்டன், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர் காசி மற்றும் காடல்குடி காவல் நிலைய காவலர் பிரபு பாண்டியன்  ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து  உத்தரவிட்டார்.


மேற்படி தனிப்படையினர் 3 மாதங்களாக தேடி காணாமல் போன கணேசனை கண்டுபிடித்து திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வைத்து பத்திரமாக மீட்டு நேற்று அவரது குடும்பத்தினரும் ஒப்படைத்தனர்.


மேற்படி காணாமல் போனவரை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad